நம்ம ஊருல குழந்தைங்க சாப்பிடும்போது நிலவில் பாட்டி வடை சுடும் கதை சொல்லி சோறு ஊட்டுவார்கள். அந்த குழந்தைங்க வளர்ந்து அவங்க குழந்தைக்கும் அதே நிலா பாட்டி கதைதான்.
ஆனால் இந்த அமெரிக்கா காரனுங்க, அத நம்பி ராக்கெட் அனுப்பி ஏமாந்த கதை நமக்கு தெரியும். அப்படி போய் ஏமாந்த முதல் மனிதன் ஆம்ஸ்ட்ராங் நேத்து செத்துட்டாரு. சரி, நிலா கூடபரவாயில்ல கொஞ்ச தூரந்தான். இப்ப அந்த அமெரிக்கனுங்க அத விட தூரமா இருக்கிற செவ்வாய்க்கு ராக்கெட் அனுப்பி இருக்கானுங்க.

எப்படியோ ஒருவழியா கஷ்டப்பட்டு ராக்கெட் செவ்வாய் கிரகம் பொய் சேந்தாச்சு. இப்ப அந்த அமெரிக்கனுங்க அங்க இருந்து ஒரு மனிதனோட குரலை பூமிக்கு அனுப்பி இருக்கானுங்க.
என்ன செவ்வாயில எப்படி மனித குரல்னு யோசிக்கிரிங்களா. அது ஒன்னும் இல்லைங்க அவனுங்க ராக்கெட் அனுப்பும்போது நாசால வேலை பாக்குற 'Charlie Bolden' குரலை பதிவு செஞ்சு அனுப்பி இருக்கானுங்க. வேற ஒன்னும் இல்ல 'Charlie Bolden' இந்த ப்ரொஜெக்ட்ல வேலை செய்ற எல்லாருக்கும் ஒரு வாழ்த்து செய்தியைத்தான் பதிஞ்சு அனுப்பி இருக்கிறார்.
இப்ப அந்த செய்தி செவ்வாய்-ல இருந்து பூமிக்கு வந்து சேர்ந்திருக்கு. இது ஒரு பெரிய சாதனை தான்.
குறிப்பு: நாம் தான் முதலில் நிலவுக்கு பாட்டியை அனுப்பினோம். கூடவே வடை போட தேவையான கடலை மாவு, எண்ணெய், அடுப்பு எல்லாம் அனுப்பினோம். என்ன தான் அமெரிக்கனுங்க மனிதக்குரலை அங்கிருந்து அனுப்பினாலும், அவர்களால் நம் இந்தியனின் சாதனையை முறியடிக்க முடியாது.
இப்படிக்கு - மதுரை வீரன்