Tuesday 28 August 2012

செவ்வாய் கிரகத்தில் இருந்து மனிதக்குரல்

நம்ம ஊருல குழந்தைங்க சாப்பிடும்போது நிலவில் பாட்டி வடை சுடும் கதை சொல்லி சோறு ஊட்டுவார்கள். அந்த குழந்தைங்க வளர்ந்து அவங்க குழந்தைக்கும் அதே நிலா பாட்டி கதைதான்.



ஆனால் இந்த அமெரிக்கா காரனுங்க, அத நம்பி ராக்கெட் அனுப்பி ஏமாந்த கதை நமக்கு தெரியும். அப்படி போய் ஏமாந்த முதல் மனிதன் ஆம்ஸ்ட்ராங் நேத்து செத்துட்டாரு. சரி, நிலா கூடபரவாயில்ல கொஞ்ச தூரந்தான். இப்ப அந்த அமெரிக்கனுங்க அத விட தூரமா இருக்கிற செவ்வாய்க்கு ராக்கெட் அனுப்பி இருக்கானுங்க.


எப்படியோ ஒருவழியா கஷ்டப்பட்டு ராக்கெட் செவ்வாய் கிரகம் பொய் சேந்தாச்சு. இப்ப அந்த அமெரிக்கனுங்க அங்க இருந்து ஒரு மனிதனோட குரலை பூமிக்கு அனுப்பி இருக்கானுங்க. 

என்ன செவ்வாயில எப்படி மனித குரல்னு யோசிக்கிரிங்களா. அது ஒன்னும் இல்லைங்க அவனுங்க ராக்கெட் அனுப்பும்போது நாசால வேலை பாக்குற 'Charlie Bolden' குரலை பதிவு செஞ்சு அனுப்பி இருக்கானுங்க. வேற ஒன்னும் இல்ல 'Charlie Bolden' இந்த ப்ரொஜெக்ட்ல வேலை செய்ற எல்லாருக்கும் ஒரு வாழ்த்து செய்தியைத்தான் பதிஞ்சு அனுப்பி இருக்கிறார்.

இப்ப அந்த செய்தி செவ்வாய்-ல இருந்து பூமிக்கு வந்து சேர்ந்திருக்கு. இது ஒரு பெரிய சாதனை தான். 

குறிப்பு: நாம் தான் முதலில் நிலவுக்கு பாட்டியை அனுப்பினோம். கூடவே வடை போட தேவையான கடலை மாவு, எண்ணெய், அடுப்பு எல்லாம் அனுப்பினோம். என்ன தான் அமெரிக்கனுங்க மனிதக்குரலை அங்கிருந்து அனுப்பினாலும், அவர்களால் நம் இந்தியனின் சாதனையை முறியடிக்க முடியாது.

இப்படிக்கு - மதுரை வீரன் 

Monday 27 August 2012

சென்னையில் முதல்நாள்

தமிழ்நாட்டில் உள்ளவர்களில் 75% பேர் சென்னையில் சென்று வேலை பார்க்கவேண்டும் என நினைப்பவர்கள். அல்லது சென்னையில் வேலை பார்க்கும் சொந்தகாரர்கள், நண்பர்கள் யாராவது இருந்தால் ஒரு நாள் அவர்களுடைய ரூம்ல போய் தங்கி சென்னையை சுற்றி பார்க்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

அப்படி சென்னையை ஒரு சொர்க்கம் என நினைத்து இங்கு வரும் ஒவ்வொருவரின் நினைப்பும் தவறு என அவர்களே எண்ணுவார்கள் சென்னை வந்த முதல் நாளிலேயே.

சென்னையில் காலை வந்து  நண்பர்களின் அறைக்கு சென்றதும் அவர்களுடைய சென்னையை பற்றிய நினைப்பு மாறும். சொந்த ஊரில் நமக்கென்று ஒரு தனி அறை இருக்கும். ஆனால் இங்கு ஒரு சிறிய அறையில் நான்கு அல்லது ஐந்து பேர். வாசலில் வரவேற்கும் செருப்புகள் . தரை முழுதும் குப்பை. ஒரு மூலையில் துணிகளின் குவியல்.

சரி என்று இதை ஏற்றுக்கொண்டு குளித்து சென்னையை சுற்றி பார்க்க கிளம்பினால், அடுத்த சோதனை. தெருவின் கடைசியில் உள்ள ஒரு கடையில் காலை டிபன். என்ன சாப்பிட வேண்டும் என நினைத்தாலும் குறைந்தது ஒரு முப்பது ருபாய். அது எந்த அளவு சுத்தமாக இருக்கும் என சொல்லத்தேவை இல்லை.

அடுத்ததாக சென்னையில் பேருந்து பயணம். காலை 9 முதல் 11 மற்றும் மாலை 6 முதல் 8 மணி வரை பேருந்தில் பயணம் செய்தால் கரும்பு ஜூஸ் போடும்போது கடைசியாக சக்கை கிடைப்பது போல நாமும் சக்கை ஆக வேண்டியது தான்.(புதிதாக வருபவர்களுக்கு வெள்ளை, பச்சை, மற்றும் நீல போர்டு பேருந்து வித்தியாசம் தெரியாமல் நடத்துனரிடம் சண்டை வேறு)

அதையும் பொருத்து கொண்டு 'Express Avenue' சென்றால்(சில வருடங்களுக்கு முன் சென்னை வருபவர்கள் மெரினா அல்லது பெசன்ட் நகர் பீச் செல்வார்கள்) ஏதோ பெரிய சொர்க்கத்தை நேரில் கண்டதுபோல சந்தோஷம். அந்த சந்தோஷம் உள்ளே சென்று 'Food Court' இல் எதாவது வாங்கவேண்டும் என்று நினைத்தவுடன் போய்விடும். அரை லிட்டர் தண்ணீர் இருபது ரூபாய், 300 மில்லி கோக், பெப்சி 50 ரூபாய். இதுவே இப்படி என்றால் உணவு அயிட்டங்களின் விலை பட்டியலை எண்ணிப்பாருங்கள்.

அடுத்த விசிட் சத்யம் சினிமாஸ், சென்னையில் ஒரு உலகத்தரம் வாய்ந்த சினிமா பார்க்க சத்யம் செல்லலாம். படம் மட்டும் பார்க்கலாம் அங்கு எதாவது சாப்பிட நினைத்தால் பர்ஸ் காலிதான்.

சென்னை வெயில், ஏர் கண்டிசன் இல்லைனா அவ்வளவுதான். இருந்தாலும் பசங்க ரூம்ல இருக்கிற காத்தாடி வைத்து அட்ஜஸ்ட் செய்தால், நம்ம அரசாங்கம் அப்ப தான் கரண்ட் கட்பண்ணும்.

அப்பறம் சென்னைல ஸ்பென்சர், பீச் எல்லாம் பார்த்துட்டு ஊருக்கு கிளம்பும்போது ரூம்ல இருந்து கோயம்பேடு போகும்போது டிராபிக் தொல்லை . (சென்னை டிராபிக் அனுபவம் வெயில் காலத்தில் ரொம்ப கொடுமை).

ஒரு வழியாக கோயம்பேடு சென்று ஊருக்கு பஸ் ஏறி ஜன்னல் சீட் பிடிச்சு உட்கார்ந்த பிறகு புத்தி சொல்லும் இனிமேல் சென்னை வரக்கூடாது என்று(வெயில், டிராபிக், விலைவாசி). மனம் சொல்லும் அடிக்கடி சென்னை வர வேண்டும் என்று(சத்யம், பீச், முக்கியமா பிகர்ஸ்)


குறிப்பு : இது என்னுடைய முதல் சென்னை அனுபவம்.

இப்படிக்கு - மதுரை வீரன் 

பதிவர் சந்திப்பில் நிகழ்ந்த மாற்றம்



குழந்தைகள் முதல் நாள் பள்ளிக்கு செல்லும்போது என்ன மன நிலையில் இருப்பர்களோ அதுபோல தான் இந்த பதிவு எழுத துவங்கும் முன் நானும் 

பலரது பதிவுகளை நான் வாசிக்கும் பொது எனக்கும் எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இதுவரை நான் படித்து ரசித்த சில பதிவர்கள் என்றால் கேபிள் சங்கர், அஞ்சா சிங்கம், நண்டு @ நொரண்டு மற்றும் பலர்

இன்று முதல் நானும் ஒரு பதிவன் ஆகிறேன். நேற்று சென்னையில் நடந்த பதிவர் மாநாட்டிற்கு சென்றேன் அங்கு நடந்த சில சம்பவங்கள் தான் என் முதல் பதிவு.

காலையில் பத்து மணிக்கெல்லாம் நிகழ்ச்சி தொடங்கும் என்றார்கள். நானும் காலை 9 மணிக்கெல்லாம் சென்று சேரவேண்டும் என எண்ணினேன். நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பார்கள், அது போலத்தான் சனிக்கிழமை இரவு சென்னையில் நல்ல மழை. இரவு நல்ல குளிர், நல்ல இழுத்து போத்திக்கிட்டு தூங்கிட்டேன். காலையில் 7 மற்றும் 7.30 மணிக்கு அலாரம் வேறு. அந்த ரெண்டு அலாரம் ஆப் பண்ணிட்டு மறுபடியும் ஒரு குட்டி தூக்கம் 9 மணி வரை. 

அப்புறம் எழுந்து ஒரு வழியா தயாராகி புண்ணியகோட்டி கல்யாண மண்டபம் சென்று சேர மணி 11. அங்க நான் ஒன்னும் சிறப்பு விருந்தினர் இல்ல எனக்காக எல்லாரும் வெயிட் பண்றதுக்கு. நாம ஸ்கூல், காலேஜ் எப்பவும் கடைசி பெஞ்ச் தான். அது மாதிரி அங்கயும் கடைசி வரிசைல காத்தாடி கீழ ஒரு சேர். மேடைல எல்லாரும் அவங்க ப்ளாக் பத்தி பேசிட்டு இருந்தாங்க. 

சத்தியமா சொல்றேன் இந்த நிகழ்சிக்கு போறதுக்கு முன்னாடி ஆண்கள் தான் அதிகமா ப்ளாக் எழுதுவாங்கன்னு நெனச்சேன். ஆனா அங்க போனதுக்கு அப்பறம் தான் தெரிஞ்சது பெண்களும் அதிகமா எழுதுறாங்கன்னு.அது மாதிரி வந்த கூட்டத்துல நெறைய வயசானவங்க, அவங்களும் ப்ளாக் எழுதுறாங்க. 

இந்த நிகழ்ச்சி இவ்வளவு சிறப்பா நடக்க உழைத்த நண்பர்களுக்கு நன்றி. இவ்வளவு நாட்கள் முகம் பார்க்காமல் அரட்டை அடித்த நண்பர்கள் சந்தித்த போது அவர்கள் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி 

அட முக்கியமா மதிய சாப்பாடு, அதற்கு ஏற்பாடு செய்த நண்பருக்கு என் நன்றி. ரொம்ப அருமை. 

மதியம் நடந்த மூத்த பதிவர்கள் சிறப்பிக்கும் விழா,  நமக்கு வழி காட்டிகளான அவர்களை சிறப்பித்தது மிகவும் அருமை. கவிஞர் சுரேகா, நிகழ்ச்சி தொகுத்து வழங்கிய விதம் மிகவும் அருமை

பதிவர்கள் அனைவரும் தங்களின் மறுபக்கத்தை காட்டிய கவியரங்கம் (முடியல, கண்ணு கட்டிடுச்சு)

கண்டிப்பாக  அடுத்த பதிவர் சந்திப்பில் நானும் ஒரு பதிவனாக பங்குபெற வேண்டும் என்கிற ஆசையில் இந்த முதல் பதிவு

குறிப்பு : கண்டிப்பா எதாவது தப்பு இருக்கும், கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிகோங்க. விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன 

புகைப்படங்கள் 







இப்படிக்கு - மதுரை வீரன்