தமிழ்நாட்டில் உள்ளவர்களில் 75% பேர் சென்னையில் சென்று வேலை பார்க்கவேண்டும் என நினைப்பவர்கள். அல்லது சென்னையில் வேலை பார்க்கும் சொந்தகாரர்கள், நண்பர்கள் யாராவது இருந்தால் ஒரு நாள் அவர்களுடைய ரூம்ல போய் தங்கி சென்னையை சுற்றி பார்க்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
அப்படி சென்னையை ஒரு சொர்க்கம் என நினைத்து இங்கு வரும் ஒவ்வொருவரின் நினைப்பும் தவறு என அவர்களே எண்ணுவார்கள் சென்னை வந்த முதல் நாளிலேயே.
சென்னையில் காலை வந்து நண்பர்களின் அறைக்கு சென்றதும் அவர்களுடைய சென்னையை பற்றிய நினைப்பு மாறும். சொந்த ஊரில் நமக்கென்று ஒரு தனி அறை இருக்கும். ஆனால் இங்கு ஒரு சிறிய அறையில் நான்கு அல்லது ஐந்து பேர். வாசலில் வரவேற்கும் செருப்புகள் . தரை முழுதும் குப்பை. ஒரு மூலையில் துணிகளின் குவியல்.
சரி என்று இதை ஏற்றுக்கொண்டு குளித்து சென்னையை சுற்றி பார்க்க கிளம்பினால், அடுத்த சோதனை. தெருவின் கடைசியில் உள்ள ஒரு கடையில் காலை டிபன். என்ன சாப்பிட வேண்டும் என நினைத்தாலும் குறைந்தது ஒரு முப்பது ருபாய். அது எந்த அளவு சுத்தமாக இருக்கும் என சொல்லத்தேவை இல்லை.
அடுத்ததாக சென்னையில் பேருந்து பயணம். காலை 9 முதல் 11 மற்றும் மாலை 6 முதல் 8 மணி வரை பேருந்தில் பயணம் செய்தால் கரும்பு ஜூஸ் போடும்போது கடைசியாக சக்கை கிடைப்பது போல நாமும் சக்கை ஆக வேண்டியது தான்.(புதிதாக வருபவர்களுக்கு வெள்ளை, பச்சை, மற்றும் நீல போர்டு பேருந்து வித்தியாசம் தெரியாமல் நடத்துனரிடம் சண்டை வேறு)
அதையும் பொருத்து கொண்டு 'Express Avenue' சென்றால்(சில வருடங்களுக்கு முன் சென்னை வருபவர்கள் மெரினா அல்லது பெசன்ட் நகர் பீச் செல்வார்கள்) ஏதோ பெரிய சொர்க்கத்தை நேரில் கண்டதுபோல சந்தோஷம். அந்த சந்தோஷம் உள்ளே சென்று 'Food Court' இல் எதாவது வாங்கவேண்டும் என்று நினைத்தவுடன் போய்விடும். அரை லிட்டர் தண்ணீர் இருபது ரூபாய், 300 மில்லி கோக், பெப்சி 50 ரூபாய். இதுவே இப்படி என்றால் உணவு அயிட்டங்களின் விலை பட்டியலை எண்ணிப்பாருங்கள்.
அடுத்த விசிட் சத்யம் சினிமாஸ், சென்னையில் ஒரு உலகத்தரம் வாய்ந்த சினிமா பார்க்க சத்யம் செல்லலாம். படம் மட்டும் பார்க்கலாம் அங்கு எதாவது சாப்பிட நினைத்தால் பர்ஸ் காலிதான்.
சென்னை வெயில், ஏர் கண்டிசன் இல்லைனா அவ்வளவுதான். இருந்தாலும் பசங்க ரூம்ல இருக்கிற காத்தாடி வைத்து அட்ஜஸ்ட் செய்தால், நம்ம அரசாங்கம் அப்ப தான் கரண்ட் கட்பண்ணும்.
அப்பறம் சென்னைல ஸ்பென்சர், பீச் எல்லாம் பார்த்துட்டு ஊருக்கு கிளம்பும்போது ரூம்ல இருந்து கோயம்பேடு போகும்போது டிராபிக் தொல்லை . (சென்னை டிராபிக் அனுபவம் வெயில் காலத்தில் ரொம்ப கொடுமை).
ஒரு வழியாக கோயம்பேடு சென்று ஊருக்கு பஸ் ஏறி ஜன்னல் சீட் பிடிச்சு உட்கார்ந்த பிறகு புத்தி சொல்லும் இனிமேல் சென்னை வரக்கூடாது என்று(வெயில், டிராபிக், விலைவாசி). மனம் சொல்லும் அடிக்கடி சென்னை வர வேண்டும் என்று(சத்யம், பீச், முக்கியமா பிகர்ஸ்)
குறிப்பு : இது என்னுடைய முதல் சென்னை அனுபவம்.

இப்படிக்கு - மதுரை வீரன்
Naan innum chennai ya suthi pathathu illa Nanba.. But nallave chennai ya pathi purincjukittenka pola..Good..
ReplyDelete