Monday 27 August 2012

பதிவர் சந்திப்பில் நிகழ்ந்த மாற்றம்



குழந்தைகள் முதல் நாள் பள்ளிக்கு செல்லும்போது என்ன மன நிலையில் இருப்பர்களோ அதுபோல தான் இந்த பதிவு எழுத துவங்கும் முன் நானும் 

பலரது பதிவுகளை நான் வாசிக்கும் பொது எனக்கும் எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இதுவரை நான் படித்து ரசித்த சில பதிவர்கள் என்றால் கேபிள் சங்கர், அஞ்சா சிங்கம், நண்டு @ நொரண்டு மற்றும் பலர்

இன்று முதல் நானும் ஒரு பதிவன் ஆகிறேன். நேற்று சென்னையில் நடந்த பதிவர் மாநாட்டிற்கு சென்றேன் அங்கு நடந்த சில சம்பவங்கள் தான் என் முதல் பதிவு.

காலையில் பத்து மணிக்கெல்லாம் நிகழ்ச்சி தொடங்கும் என்றார்கள். நானும் காலை 9 மணிக்கெல்லாம் சென்று சேரவேண்டும் என எண்ணினேன். நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பார்கள், அது போலத்தான் சனிக்கிழமை இரவு சென்னையில் நல்ல மழை. இரவு நல்ல குளிர், நல்ல இழுத்து போத்திக்கிட்டு தூங்கிட்டேன். காலையில் 7 மற்றும் 7.30 மணிக்கு அலாரம் வேறு. அந்த ரெண்டு அலாரம் ஆப் பண்ணிட்டு மறுபடியும் ஒரு குட்டி தூக்கம் 9 மணி வரை. 

அப்புறம் எழுந்து ஒரு வழியா தயாராகி புண்ணியகோட்டி கல்யாண மண்டபம் சென்று சேர மணி 11. அங்க நான் ஒன்னும் சிறப்பு விருந்தினர் இல்ல எனக்காக எல்லாரும் வெயிட் பண்றதுக்கு. நாம ஸ்கூல், காலேஜ் எப்பவும் கடைசி பெஞ்ச் தான். அது மாதிரி அங்கயும் கடைசி வரிசைல காத்தாடி கீழ ஒரு சேர். மேடைல எல்லாரும் அவங்க ப்ளாக் பத்தி பேசிட்டு இருந்தாங்க. 

சத்தியமா சொல்றேன் இந்த நிகழ்சிக்கு போறதுக்கு முன்னாடி ஆண்கள் தான் அதிகமா ப்ளாக் எழுதுவாங்கன்னு நெனச்சேன். ஆனா அங்க போனதுக்கு அப்பறம் தான் தெரிஞ்சது பெண்களும் அதிகமா எழுதுறாங்கன்னு.அது மாதிரி வந்த கூட்டத்துல நெறைய வயசானவங்க, அவங்களும் ப்ளாக் எழுதுறாங்க. 

இந்த நிகழ்ச்சி இவ்வளவு சிறப்பா நடக்க உழைத்த நண்பர்களுக்கு நன்றி. இவ்வளவு நாட்கள் முகம் பார்க்காமல் அரட்டை அடித்த நண்பர்கள் சந்தித்த போது அவர்கள் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி 

அட முக்கியமா மதிய சாப்பாடு, அதற்கு ஏற்பாடு செய்த நண்பருக்கு என் நன்றி. ரொம்ப அருமை. 

மதியம் நடந்த மூத்த பதிவர்கள் சிறப்பிக்கும் விழா,  நமக்கு வழி காட்டிகளான அவர்களை சிறப்பித்தது மிகவும் அருமை. கவிஞர் சுரேகா, நிகழ்ச்சி தொகுத்து வழங்கிய விதம் மிகவும் அருமை

பதிவர்கள் அனைவரும் தங்களின் மறுபக்கத்தை காட்டிய கவியரங்கம் (முடியல, கண்ணு கட்டிடுச்சு)

கண்டிப்பாக  அடுத்த பதிவர் சந்திப்பில் நானும் ஒரு பதிவனாக பங்குபெற வேண்டும் என்கிற ஆசையில் இந்த முதல் பதிவு

குறிப்பு : கண்டிப்பா எதாவது தப்பு இருக்கும், கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிகோங்க. விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன 

புகைப்படங்கள் 







இப்படிக்கு - மதுரை வீரன் 

11 comments:

  1. வாழ்த்துக்கள் சார்...

    அடுத்த திருவிழாவில் சந்திப்போம்...

    நன்றி...

    ReplyDelete
  2. மதுரை வீரன்... உங்களை வருக வருக என்று பதிவுலகிற்கு வரவேற்று தள்ளுகிறேன்...

    Followers widget வைக்கவும், பின்னூட்டபெட்டி ஸ்டைலை மாற்றவும்...

    ReplyDelete
  3. தயவு செய்து word verification நீக்கவும்... முடியல...

    ReplyDelete
    Replies
    1. தடங்கலுக்கு மிகவும் வருந்துகிறேன்

      Delete
  4. பதிவுலகிற்கு சிவப்புக் கம்பள வரவேற்பு...

    வாழ்த்துகள் மதுரை வீரன்...

    ReplyDelete
  5. வருக நல்ல பதிவுகள் பல தருக

    ReplyDelete
  6. அறிமுகப்படுத்தியதற்கு நன்றி

    ReplyDelete
  7. பதிவு உலகில் ஓர்
    புது முகமாகத் தன்னைப்
    பதிவு செய்துகொண்ட
    புதினமே ! வருக ! வருக !!

    "எழுது" எனும் மன வேகம்
    எழு எனும் எண்ணத்தின் தாக்கம்.
    கொக்கரக்கோ எனக் கூவும் கோழியும்
    எழு எழு என்றே ஊரை எழுப்புகிறது.

    பதிவர் விழா ஒரு
    புதுமை விழா.
    எழுதும் திறனுள்ள அனைவரையும்
    எழச்செய்த ஓர் ஏவு கணை.

    அது இருக்கட்டும்.
    அந்த இரண்டாம் நிழற்படத்தில்
    இருப்பவர் யார் என
    யாரேனும் சொல்லுங்களேன் !!


    சுற்றியுள்ள அனைவரையுமே தன்
    சுந்தரத் தமிழாலே
    தந்திரமா மந்திரமா தெரியவில்லை !!
    தன் வலையிலே பிடித்தாரே !!

    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  8. நல்லி அனுபவ பதிவு

    ReplyDelete